ஏகப்பட்ட உதிரிக்கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் களமிறங்கிய பாராளுமன்ற தேர்தல் ஒருமாதிரியாக முடிவுக்கு வந்திருக்கிறது. வட கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பெரும்பான்மையான மக்கள் தங்கள் ஆணையை வழங்கியிருக்கிறார்கள். ஆகக் கூடியது 14 ஆசனங்களை (போனஸ் உள்ளடங்கலாக)பெறக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. தேர்தலில் போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் ஒரு ஆசனத்தை கூட கைப்பற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வட கிழக்கில் வாக்களிப்பு வீதம் மிகவும் குறைவாக பதியப்பட்ட தேர்தலாக இது கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 18% ஆன வாக்குகளே பதியப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட விருப்பத்தகாத பிளவுகள் வாக்காளர்களிடையே ஒரு சலிப்பை ஏற்படுத்த தவறவில்லை. அது மட்டுமில்லாமல் இடம்பெயர்ந்து யாழ் மாவட்டத்தில் வாழும் மக்களின் மனநிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் யாழ் மாவட்டத்தில் 18,000 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிக அளவில் உதிரிக் கட்சிகளும் சுயேட்சைகளும் களமிறங்கியதால் வந்த குழப்ப நிலை தான் இதற்கு காரணம் என எண்ணத் தோன்றுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டிருக்காவிட்டால் மேலும் சில ஆசனங்களை பெற்றிருக்கக் கூடும்.
தேர்தல் திருவிழா இனிதே நிறைவடைந்தாலும் அரசு என்ன காரணத்திற்காக பொதுத்தேர்தலுக்கு சென்றதோ அந்த இலக்கை அடைய முடியவில்லை. வட கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலமிழக்கச் செய்தல் மற்றும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுதல் ஆகிய இரட்டை இலக்கை அடைய முயன்று தோற்றுப் போயிருக்கிறது. சிங்கள மக்கள் அரசின் கடும் போக்குக்கு ஆதரவளித்துள்ளதுடன் தமிழ் மக்கள் தேசியம், தன்னாட்சி போன்றவற்றை கோரி நிற்கின்றனர். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டதாகவே காணப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் பிரதேசவாதம் பேசியோரின் சாயம் வெளுத்துப் போயுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் ஒரு ஆசனத்தை கூட கைப்பற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு மக்கள் தேசியம், தன்னாட்சி மீது கொண்ட பற்றை நிரூபித்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. என்னதான் சலுகைகளை வழங்கினாலும் உரிமைகளை விட முடியாது என தமிழ் மக்கள் உறுதி பூண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை போட்டி அரசியல் மூலம் வெல்லமுடியாது என்பது கடந்த கால வரலாறு. மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்கி தமிழ் தேசியம் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து தரப்பினரையும் உள்வாங்கி பரந்தளவிலான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அவ்வமைப்பினூடாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தமிழர்களது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் அவா.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சிறீகாந்தா, சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பொது அமைப்புகளை ஓரணிப்படுத்த சிவராம், நடேசன் போன்றோர் இன்று எம் மத்தியில் இல்லை. ஆனால் இந்த பணியை முன்னெடுப்பது தான் நம் முன்னால் உள்ள உடனடி அரசியல் பணியாக இருக்க முடியும்.
read more