தமிழர் பொருளாதாரம் முன் எப்போதும் இல்லாதவாறு வட கிழக்கில் பெரும் பின்னடைவை கண்டிருக்கிறது. போர்நிறுத்த காலத்தில் வன்னியில் விவசாயத்தையும் சிறுகைத்தொழில்களையும் கொண்டு பசி பட்டினியற்ற ஒரு நிலையை உருவாக்க முடிந்திருந்தது. சிலர் போரினால் இடிந்துபோன வீடுகளையும் மீண்டும் கட்டியிருந்தனர். ஆனால் அடுத்த சில வருடங்களுக்குள்ளேயே எல்லாம் கனவாகிப் போகும் என்று யாரும் கற்பனை கூட செய்யவில்லை. போரினால் விலைமதிப்பற்ற உயிர்களை மட்டுமல்ல பெருவாரியான பயந்தரு மரங்கள், கால்நடைகள், விவசாய நிலங்கள் என குறுங்கால மற்றும் நீண்டகால முதலீடுகளை இழந்து எதிர்காலம் கேள்விக்குறியாகிய நிலையில் எம் மக்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நம்பிக்கை என்ற ஒன்றையே நம்பி வாழ்ந்து பழகிப்போன நாம், நாளைய உதயம் நமக்கானது என உறுதி கொள்ளவேண்டும். நம் மக்களுக்கான உதவியை நிறுவனப்படுத்தி செய்யக்கூடிய சூழ்நிலை தாயகத்தில் இல்லாத காரணத்தினால் தாயக உறவுகளுக்கூடாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு சிறு அளவிலேனும் உதவ நாம் அனைவரும் முன் வர வேண்டும்.
கல்வி ஒன்றே நமது எதிர்கால சமுதாயத்தை வளமாக்கும். தமிழர் நாம் எமது ஜனநாயக போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு வளமான எதிர்கால சமுதாயம் இன்றியமையாதது.
read more